கோலாலம்பூர், மார்ச் 1: ரமலான் மாதத்தில் அனைத்து வகையான அவதூறுகள் மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதில் இருந்து முஸ்லிம்கள் தங்களை விலக்கிக் கொள்ளுமாறு தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பாட்ஸில் கேட்டுக் கொண்டார்.
அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், இந்த ரமலான் ஆசீர்வாதங்களினாலும் அமைதியாலும் அவர்கள் வாழ்க்கை நிறைந்திருக்கும் என்று நம்புகிறார்.
"உங்களின் அனைத்து வழிபாட்டுகள் மற்றும் வேண்டுதல்கள் முழுமையாக இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் முஸ்லிம்களுக்கு பலத்தையும் பொறுமையையும் வழங்கட்டும் என்று வாழ்த்தினர்.
"நாம் அனைவரும் நமது வழிபாட்டு செயல்களை மேம்படுத்துவோம், அனைத்து வகையான அவதூறுகள் மற்றும் போலி செய்திகள் பரவுவதில் இருந்து விலகி இருப்போம்" என்று அவர் ஒரு சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் நாளை நோன்பு நோற்க தொடங்குவார்கள்.


