கோத்தா கினாபாலு, மார்ச் 2;- இன்று காலை 8 மணி நிலவரப்படி 102 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் அறிக்கையின் அடிப்படையில், சபாவின் உட்புறப் பகுதிகளில் ஆறு கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.
அவர்கள் தெலுபிட்டில் உள்ள ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தஞ்சம் புகுந்துள்ளனர்.
"14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் கம்போங் கியாபாவில் உள்ள மாவூக் கிராம மண்டபத்திலும், 23 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் நாங்கோ கிராம மண்டபத்திலும் உள்ளனர்" என்று இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பங்கன் கிராம மண்டபத்தில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேரும், கானா ஜாத்தி பழைய மசூதி (40 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேரும்) மற்றும் டெம்பிடாங்-பிடாங் கிராம மசூதி (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும்) தங்கவைக்கப் பட்டுள்ளனர்.


