ஷா ஆலம், மார்ச் 1- அரச முத்திரைக் காப்பாளர் டான் ஸ்ரீ சைட் டேனியல் சைட் அகமதுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, மலேசியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை ரமலான் நோன்பைத் தொடங்குவார்கள்.
ஆட்சியாளர்களின் ஒப்புதலுடனும் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் உத்தரவுக்கேற்பவும் இந்த தேதி தீர்மானிக்கப்பட்டது என்பதை அவர் நேற்று ஆர்டிஎம் நேரடி ஒளிபரப்பில் உறுதிப்படுத்தினார்.
மாமன்னரின் உத்தரவுக்கேற்பவும் ஆட்சியாளர்களின் ஒப்புதலுடனும் மலேசியாவில் ரமலான் நோன்பின் முதல் நாள் மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்பதை அறிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.
ரமலான் நோன்பு தொடக்கத்தைத் தீர்மானிக்க நாடு முழுவதும் 29 இடங்களில் பிறை பார்க்கும் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக சைட் டேனியலின் அலுவலகம் முன்னதாக கூறிருந்தது.


