கோலாலம்பூர், பிப் 27 - சுங்கை கோலோக் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுகைத் திட்டத்தின் (பி.எல்.எஸ்.பி-யின்) கட்டுமானத்தை விரைவுப்படுத்தியதன் மூலம் 170 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் சேமித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மன்றம் பராமரிக்கும் கட்டம் உட்பட கட்டுமானத்தின் மூன்று கட்டங்களையும் ஒருங்கிணைக்க அரசாங்கம் செய்த முடிவே அதற்கு காரணம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதற்கிடையில், சுங்கை கோலோக் - ரந்தாவ் பஞ்சாங் பேச்சுவார்த்தைகள், மத்திய அரசுக்கும் தாய்லாந்து அரசாங்கத்திற்கும் இடையிலான சுங்கை கோலோக்கின் அகழ்வாராய்ச்சி மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அவர் விளக்கினார்.
கிளந்தானில் உள்ள சுங்கை கோலோக் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுகைத் திட்டத்தின் மேம்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறை ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.


