லண்டன், பிப் 27 – 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-மைத் தேடும் பணி, இந்தியப் பெருங்கடலில் தொடங்கப்பட்டுள்ளது. விமானம் மறைந்த மர்மத்தை அவிழ்ப்பதற்கான கடைசி முயற்சி இதுவாகும்.
அவ்வகையில், கடந்த வார இறுதியில் பெர்த் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு புதிய தேடல் மண்டலத்தை Ocean Infinity நிறுவனத்துக்குச் சொந்தமான ஆழ்கடல் துணை கப்பலான Armada 7806 அடைந்துள்ளது.
கப்பல் சென்று சேர்ந்து கையோடு, கடலுக்கடியில் விரிவான ஸ்கேன் செய்ய தானியங்கி வாகனம் ஒன்று உடனடியாக அனுப்பப்பட்டதாகக் ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்கள் கூறுகின்றன.
அந்த போயிங் 777 விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருக்கலாம் என நம்பப்படும் 4 முக்கிய இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, 15,000 கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய 6 வார கால தேடலில் Armada 7806 கப்பல் ஈடுபடவுள்ளது.


