கோலாலம்பூர், பிப் 26 - BRIEF-i எனப்படும் பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் கீழ், இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்காக பிரேத்தியேகமாக வழங்கப்பட்டிருந்த ஒதுக்கீடு, 10 கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் தங்களது வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கு இந்த நிதி பயனளிக்கும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த ஆண்டு BRIEF-i திட்டத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்காக ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூடுதலாக மேலும் ஐந்து கோடி ரிங்கிட் நிதியை பேங்க் ரக்யாட் ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை இந்திய தொழில்முனைவோர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
மேலும், வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஹலால் சான்றிதழலைப் பெறுவதற்கும் பேர்ங் ரக்யாட் மூலம் ஆலோசனை மற்றும் வழிக்காட்டுதல்களும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
''இப்போது நீங்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்யுங்கள். அனுமதி கிடைத்தவுடன் அவர்களே உங்களை அழைத்து பயிற்சி மற்றும் விளக்கம் கொடுப்பர். பின்னர், JAKIM-இல் பணம் செலுத்தலாம். உங்களுக்கு சான்றிதழ் கிடைக்கும்,'' என்றார் அவர்.
கோலாலம்பூரில் உள்ள பேங் ரக்யாட்டில் இந்திய தொழில்முனைவோர்களுக்கு மாதிரி காசோலையை வழங்கியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.


