ஷா ஆலம், பிப். 26 - சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 57 கோடியே 90 லட்சம் வெள்ளி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இவ்ண்டிற்கான 300 கோடி வெள்ளி வருமான இலக்கை அடைய முடியும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வருமான எண்ணிக்கை நிச்சயமாக ஊக்கமளிக்கிறது. ஆனால், இன்னும் சிறந்த வளர்ச்சியை அடைய சீரான தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
ஆகவே, அரசு ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் எப்போதும் துடிப்புடனும் உறுதியுடனும் செயலாற்றும் அதேவேளையில் குழுப்பணி முறையை வளர்க்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன். பரஸ்பர புரிதல் இருந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சொன்னார்.
இந்த மூன்று குணாதிசயங்களையும் நாம் ஏற்றுக்கொண்டால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து சிறந்தவற்றைச் செய்ய முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.
நேற்று மாலை ஐசிட்டியில் உள்ள டபுள் ட்ரீ பைவ் ஹில்டனில் நடைபெற்ற துறைத் தலைவர்களுக்கான சாதனையாளர் விருதளிப்பு விழாவில் உரையாற்றும்போது போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாநில அரசு நிர்வாகத்தில் உள்ள 13 துறைத் தலைவர்களுக்கு மந்திரி புசார் பாராட்டு விருதுகளை வழங்கினார். அவர்களின் சேவை முழுவதும் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதற்காக ப் பாராட்டு மற்றும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.


