கோத்தா கினபாலு, பிப் 25 - நாடு முழுவதும், RTB எனும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை மேற்கொள்ள 2,200 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கண்டறியப்பட்டு வரும் RTB மேம்பாட்டு பணி, குறிப்பாக வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதிகளின் ஒதுக்கீடும் அதில் அடங்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.
கூடுதலாக, பெனாம்பாங் மற்றும் புத்தாதன் பகுதிகளில் வெள்ளத்தை சமாளிக்க 13வது மலேசியா திட்டத்தில் கூடுதலாக RM800 மில்லியன் சேர்க்கப்படும்.
"இப்பகுதியில் ஆண்டுக்கு நான்கு முறை வெள்ளம் ஏற்படுகிறது. இதைத் தணிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில தொகுப்புகளை நாங்கள் செயல்படுத்தி விட்டதாக உணர்கிறோம். இன்னும் சில செயல்படுத்தவுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.


