கோலாலம்பூர், பிப் 25 - கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் பெண் திட்டத்தின் மூலம் இந்தியப் பெண் தொழில்முனைவோர் 3,577 பேருக்கு RM32.65 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
`Amanah Ikhtiar Malaysia`இன் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் இந்தியப் பெண்கள் பலர் தொழில்துறையில் ஈடுபட்டு தங்களையும் தங்கள் குடும்பத்தையும் மேம்படுத்திக் கொள்ள பெரிதும் உதவுவதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இல்லத்தரசிகள், குறு தொழில்முனைவோராக ஈடுபட குறிப்பாக அண்மைய தொழில்நுட்பம், திறன் பயிற்சி மற்றும் வணிக திறன்களைப் பயன்படுத்த ஊக்குவிப்பதற்காக அமைச்சு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து, மக்களவையில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்லிமின் யாஹ்யா எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.


