புத்ராஜெயா, பிப் 24 - எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக அமலாக்க அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்று என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
அரச மலேசிய காவல்துறை படை, உள்நாட்டு வருமான வரி வாரியம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகிய தரப்புகள் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாமும் தமது அமைச்சரவை உறுப்பினர்களும் தலையிடுவதில்லை அவர் குறிப்பிட்டார்.
ஊழல் போன்ற நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் விளக்கினார்.


