கோலாலம்பூர், பிப் 24 - 2013-ஆம் ஆண்டு தொடங்கி மலேசியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் சரிவு கண்டுள்ளது.
2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் கருவுறுதல் விகிதம் அதிகமாகப் பதிவாகியதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறைகளால் திருமணம் செய்து கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வயது, குழந்தைகளின் எண்ணிக்கை, கருவுறாமைப் பிரச்சனை ஆகியவற்றால் கருவுறுதல் விகிதம் சரிவு கண்டிருப்பதாக நேன்சி கூறினார்.
கருவுறுதல் பிரச்சனையை எதிர்கொள்ள தேசிய மக்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம், எல்.பி.பி.கே.என் மூலம் அமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் விளக்கினார்.


