ஷா ஆலம், பிப் 24 : குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சுமையைக் குறைக்க, இந்த புதிய தவணையில் கல்வி கற்க தொடங்கியுள்ள மாணவர்களுக்காகப் பள்ளி உதவிக்கான விண்ணப்பங்களை கோத்தா கெமுனிங் தொகுதி திறந்துள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை:
✅ ஒரு குடும்பத்தில் 2 பெறுநர்களுக்கு மட்டுமே உதவி வழங்கப்படும்
✅ SK, SJKC, SJKT, SMK, SMJK, SAM & SAMT மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன
✅ குடும்ப வருமானம் RM5,000 மற்றும் அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்
✅ விண்ணப்பதாரர் கோத்தா கெமுனிங் தொகுதி வாக்காளராக இருக்க வேண்டும் (பெற்றோர்/பாதுகாவலர்களில் ஒருவர்)
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்று தொடங்கி ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பூர்த்தியாகும் வரை திறந்திருக்கும்.
மேலும் தகவலுக்கு, கோத்தா கெமுனிங் தொகுதியின் சமூக சேவை மையத்தை 03-5131 4354 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


