புத்ராஜெயா, பிப் 24: கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், தனது பங்களிப்பாளர்களுக்கு சிறந்த அடைவிலான இலாப ஈவுத்தொகையை ஊழியர் சேமநிதி வாரியமான (KWSP) அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேமநிதி வாரியத்தின் திறன்மிக்க செயலாக்கத்தின் அடிப்படையில், 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த இலாப ஈவுத்தொகைக்கான நற்செய்தியை அறிவிக்கப்படலாம் என இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் கூறினார்.
"கடந்தாண்டின் மூன்றாவது காலாண்டு வரையில் சேமநிதி வாரியத்தின் செயல்திறன் வரவேற்கக்கூடியது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 5,750 கோடி ரிங்கிட் பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது சிறந்த அடைவாகும். எனவே, அந்த செயல்திறன் நான்காவது காலாண்டு வரை தொடர வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, 2024-ஆம் ஆண்டு சேமநிதி வாரியத்தின் இலாப ஈவுத்தொகையின் விழுக்காடு குறித்து, அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


