நராதிவாட், பிப். 24 - குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் எழு
போலீஸ்காரர்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் யாலா
மாநிலத்தின் பன்னாங் சாத்தா மாவட்டத்தில் உள்ள பேரங்காடி ஒன்றில்
நேற்றிரவு நிகழ்ந்தது.
உள்நாட்டு நேரப்படி நேற்றிவு 8.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு
பொறுப்பானவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்திய கும்பலை
அதிகாரிகள் தேடி வருவதாகப் பன்னாங் சாத்தா மாவட்ட போலீஸ்
தலைவர கர்னல் ரானோன் சுராவிட் கூறினார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது போலீசார் இரு நான்கு சக்கர இயக்க
வாகனங்களில் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அந்த
வாகனங்கள் பேரங்காடியை நெருங்கிய போது அங்கு பதுக்கி
வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு தொலைக் கட்டுப்பாட்டு கருவி மூலம்
வெடிக்க வைக்கப்பட்டது என்று அவர் சம்பவ இடத்தில்
செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு போலீஸ்கா ர்களும் 16 பொது
மக்களும் சிகிச்சைக்காக பன்னாங் சாத்தா மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டதோடு குற்றவாளிகளைத் தேடும் நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
தாய்லாந்து பிரதமர் தாக்சின் சினவாத்ரா நாட்டின் தென்பகுதிக்கு வருகை
மேற்கொள்வதற்கு ஒரு தினத்திற்கு முன் இந்த தாக்குதல் சம்பவம்
நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் நெருக்கடிக்கு
தீர்வு காணும் பொருட்டு பிரதமர் இப்பயணத்தை மேற்கொள்கிறார்.


