ஜோர்ஜ் டவுன் பிப். 24- பினாங்கு பண்டாராயா அரங்கில் கால்பந்து விளையாட்டில் கலந்து கொண்டிருந்த ஆயர் கூனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஸ்சாம் ஷாருடின் (வயது 59) திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
நேற்று மாலை 6.00 மணியளவில் அந்ந அரங்கில் நடைபெற்ற பினாங்கு முதலமைச்சர் கிண்ண நான்கு முனை கால்பந்து போட்டியின் போது வீரர்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது இஸ்சாம் மயங்கி விழுந்ததாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முகமது தெரிவித்தார்.
திடலோரத்தில் அவசர முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் மாலை 5.40 மணிக்கு அவர் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அன்னார் மாலை 6.28 மணிக்கு இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய இஸ்சாமின் உடல் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் பிரிவைக்கு அனுப்பப்பட்டதாக அப்துல் ரோசாக் கூறினார்.
கடந்த 1966 ஆகஸ்டு 31 ஆம் தேதி பிறந்த இஸ்சாம், 80 மற்றும் 90ஆம் ஆண்டுகளில் தேசிய மற்றும் பேராக் மாநில கால்பந்து வீரராக இருந்தார் என் அறியப்படுகிறது.
மறைந்த இஸசாம் கடந்த 15வது பொதுத் தேர்தலில் ஆயர் கூனிங் மாநில சட்டமன்ற தொகுதியில் அம்னோ வேட்பாளராக களமிறங்கினார்.
தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் பாரிசன் நேஷனல் தலைவருமான அவர், அயர் கூனிங் தொகுதியில் 2,213 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.


