இன்று ஒரு அறிக்கையில், மலேசிய காற்பந்து லீக். பி. டி. ஆர். எம் எஃப்சிக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாகவும், போட்டியின் முடிவு 0-3 இழப்பாக கருதப் படுவதாகவும்,அதனுடன் RM3,000 அபராதம் விதிக்கப் படுவதாகவும், அணிக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப் பட்டதாகவும், அதே குற்றத்தை மீண்டும் புரிந்தால் இன்னும் கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. உங்கள் தகவலைப் பொறுத்தவரை, வீரர்களை இடைநீக்கம் செய்வது தொடர்பான அனைத்து விஷயங்களும் எஃப்ஏஎம் ஒழுங்குக் குழு மூலம் எஃப்ஏஎம்மின் கட்டுப்பாட்டில் உள்ளன "என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய முதல் இறுதி ஆட்டத்தில் , சிலாங்கூர் எஃப்சி, அரச போலீஸ் எஃப்சியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது, ஆனால் எஃப்ஏஎம் ஒழுங்குக் குழுவின் முடிவு சிலாங்கூர் எஃப்சிக்கு 3-0 என்ற கோல் கணக்கில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.
பி. டி. ஆர். எம் எஃப்சியின் குற்றம் 58 வது நிமிடத்தில் முகமது சஃபி அகமதுவை மாற்று வீரராக களமிறக்கியதில் தொடங்கியது. அந்த வீரர் , மலாக்கா எஃப்சிக்கு எதிரான காலிறுதி முதல் போட்டியில் ஒரு மஞ்சள் அட்டை பெற்ற பின்னர் கெடா டாருல் அமான் எஃப்சிக்கு எதிரான அரையிறுதி 2 ம் ஆட்டத்தில் மேலும் ஒரு மஞ்சள் அட்டை No.32 ஜெர்சி பெற்றதால் , அந்த விளையாட்டாளர் ஒரு போட்டியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அதை மீறி செயல் பட்டதால் எஃப்ஏஎம் ஒழுங்குக் குழு பி. டி. ஆர். எம் எஃப் சி போட்டியில் தகுதியற்ற வீரரை களமிறக்குவதில் எஃப்ஏஎம் ஒழுங்கு விதி 32 மற்றும் 57 லை மீறியதாக கண்டறிந்தது.
2024-2025 சேலஞ்ச் கோப்பை இறுதி 2 இல் இரு அணிகளும் மீண்டும் விளையாடுகின்றன MBPJ ஸ்டேடியம், கிளானா ஜெயாவில், நாளை, சிலாங்கூர் எஃப்சி தற்போது PDRM எஃப்சியை 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- பெர்னாமா


