சுபாங் ஜெயா, பிப் 20 - போக்குவரத்து கிடங்கு தொழில் துறையை வலுப்படுத்துவதற்கான விவேக உபகரண வளாக வரி விலக்கு போன்ற அரசாங்கத்தின் ஆதரவை அத்துறை பயன்படுத்திக் கொள்வதோடு, டிஜிட்டல் துறையின் 4.00 கட்ட தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதையும் ஊக்குவிக்க வேண்டும்.
வரி விலக்குகள் போன்ற முதற்கட்ட முயற்சிகள், தளவாட அளவில் சிறந்த மற்றும் திறமையான செயல்பாடுகள் போன்றவற்றை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
தொழில்துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப,போக்குவரத்து கிடங்கு தொழில் துறையும் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
மலேசியாவில் போக்குவரத்து கிடங்கு தொழில்களின் எதிர்காலம், வாய்ப்புகள் நிறைந்ததாக அமையும் என்று அவர் கூறினார்.
“டிஜிட்டல்மயமாக்கல் அதிகரித்து வருவதாலும், பசுமை தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதாலும், நாம் ஒரு புதிய சகாப்தத்தின் வாசலில் நிற்கிறோம்,” என்று அவர் விளக்கினார்.
அரசாங்கத்தின் ஆதரவை போக்குவரத்து கிடங்கு தொழில்த் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


