ஷா ஆலம், பிப். 20 - இவ்வாவாண்டு மலேசியாவில் முஸ்லிம்கள் நோன்பு தொடங்குவதை அறிவிப்பதற்கான ரமலான் மாதப் பிறை பார்க்கும் நிகழ்வு எதிர்வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும்.
நோன்பின் தொடக்க தேதியை நிர்ணயிக்கும் முறை ருக்கியா மற்றும் ஹிசாப்பை அடிப்படையாகக் கொண்டது என்று ஆட்சியாளர்களின் மாநாடு ஒப்புக்கொண்டதாக அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் தெரிவித்ததாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.
மாட்சிமை தங்கிய பேரரசரின் உத்தரவின் பேரிலும் மாட்சிமை தங்கிய ஆட்சியாளர்களின் ஒப்பதலின் பேரிலும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பிறை பார்க்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன் என்று அரச முத்திரைக் காப்பாளர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
மேலும், அதே தினத்தில் முடிவு செய்யப்படும் ரமலான் தொடக்க தேதி தொடர்பான அறிவிப்பையும் மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அரச முத்திரைக் காப்பாளர் வெளியிடுவார்.


