சிலாங்கூர், பிப் 20 - தற்போது மக்களிடையே மனநல ஆரோக்கியத்திற்கு எதிரான எதிர்மறை கருத்துகள் அதிகரித்து வருவது ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது.
இது மக்கள் மத்தியில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனையாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
மக்கள் தங்களின் எதிர்மறையான கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு "War On Stigma" என்ற பிரச்சாரத்தை தொடக்கி வைத்துள்ளது.
மனநலப் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனநலப் பிரச்சனைகள் உள்ள அதிகமான மக்கள் நிபுணர்களின் உதவியை நாட முன்வரும் வகையில் இக்கண்ணோட்டம் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த எதிர்மறையான கருத்துகள்தான் மனநோயாளிகள் சிகிச்சை பெற மறுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ காரணமாகிறது என்று டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் விவரித்தார்.


