பஹ்ரேன், பிப் 20 - பஹ்ரேனில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மை சந்தித்தார்.
பிரதமர் மாமன்னரிடம் நலன் விசாரித்ததோடு, நாட்டின் அண்மைய நிலவரங்கள் குறித்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஹ்ரேன் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் சல்மான் ஹமாட் அல்-கலிஃபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் அந்நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.
தசைகள் மற்றும் எலும்பு வலியினால் சுல்தான் இப்ராஹிம் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக இஸ்தானா நெகாரா தெரிவித்திருந்தது.
இம்மாதம் 21ஆம் தேதி மாமன்னர் நாடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் பருவத்தில் தீவிரமாக விளையாட்டுகளில் ஈடுபட்டுதோடு, இராணுவப் பயிற்சி போன்றவைக் காரணமாக அவருக்கு இந்த வலி ஏற்பட்டது.


