நீலாய், பிப் 20 – கோலாலம்புர் மாநகர் பகுதியில் 17 மாடிகளைக் கொண்ட பள்ளியை கட்டுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்திருக்கும் ஆலோசனையை கல்வி அமைச்சு வரவேற்று உள்ளது. இருந்தபோதிலும் பாதுகாப்பு மற்றும் பொருத்தமான அம்சங்கள் ஆராயப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.
கூட்டரசு பிரதேச கல்வித்துறையின் கீழ் உயரமான பள்ளி செயல்படுத்தப்பட்டுள்ளன. அதாவது கோலாலம்பூரில் உள்ள 10 மாடிகளைக் கொண்ட ஸ்ரீ செந்தோசா தேசிய இடைநிலைப் பள்ளி மிக உயரமாகக் கட்டப்பட்டடுள்ளது.
17 மாடிகள் கொண்ட பள்ளி விவகாரத்தைப் பொறுத்தவரை எத்தனை மாடிகள் குழந்தைகளுக்கு ஏற்றது மற்றும் பாதுகாப்பானது என்பதை பரிசீலனை செய்வோம் என்று பட்லினா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


