கோலாலம்பூர், பிப் 19 - அனைத்து பள்ளிகளிலும் உலகத் தாய்மொழி தினத்தை கல்வியமைச்சு அதிகாரப்பூர்வமாக கொண்டாட வேண்டும் என்று தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தமிழ் அறவாரியம், லிம் லியன் கியோக் கலாச்சார அறவாரியத்தால் உலகத் தாய்மொழி தினம் தொடங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு விழா எதிர்வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் கோலாலம்பூர் சீன அசெம்பளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பல்லின அமைப்புகளுடன் சேர்ந்த இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகிறன.
உலகத் தாய்மொழி தினம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதே வேளையில் அன்றைய தினம் பல முக்கிய நிகழ்வுகளும் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக உலகத் தாய்மொழி தின தொடக்க விழாவில் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து உரையாற்றுவார்.
ஆகவே, தமிழ் பற்றாளர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.


