கோலாலம்பூர், பிப் 19 – எஸ்.பி.எம் சான்றிதழ் இல்லாத ஒப்பந்த கால அதிகாரிகளின் சேவையை நிறுத்தும் உத்தரவை தங்களது தரப்பு பிறப்பிக்கவில்லை என பொதுச் சேவைத்துறை வலியுறுத்தியது.
இந்த ஒப்பந்த நியமனம், நிர்வாகம் சேவைக்கான நடப்பு தேவையின் அடிப்படையில் இருப்பதோடு இரு தரப்புக்களிடையே காணப்பட்ட இணக்கத்திற்கு ஏற்ப அமைந்துள்ளதாகப் பொதுச் சேவைத்துறை தெரிவித்தது.
2024ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தகால அதிகாரிகளில் 2,037 பேர் மட்டுமே எஸ்.பி.எம் சான்றிதழ் இல்லாதவர்களாவர்.
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வரை, பொது சேவை ஊதிய முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.பி.எம் சான்றிதழ் இல்லாத ஒப்பந்த அதிகாரிகளை மீண்டும் நியமிக்க, சேவைத் திட்ட நிபந்தனைகளைத் தளர்த்துவதற்காகப் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 108 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அந்த எண்ணிக்கையில், 83 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன என பொதுச் சேவைத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


