NATIONAL

சாலையைப் பயன்படுத்துவோர் அவசரத் தடத்தைச் சிறப்பு பாதையாகப் பயன்படுத்த வேண்டாம்

18 பிப்ரவரி 2025, 9:33 AM
சாலையைப் பயன்படுத்துவோர் அவசரத் தடத்தைச் சிறப்பு பாதையாகப் பயன்படுத்த வேண்டாம்

கோலா பிலா, பிப் 18 - சாலையைப் பயன்படுத்துபவர்கள், அவசரத் தடத்தை சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்) நினைவுறுத்தியுள்ளது.

மரண விபத்துக்களைத் தடுக்க அவசரத் தடத்தைக் கடக்கும்போது சாலையைப் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகள் கவனமாக இருக்குமாறு எல்.எல்.எம் தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹருண் தெரிவித்தார்.

"நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை மோட்டார் சைக்கிளோட்டிகள் மோதி மரண விபத்துக்கள் ஏற்படுவது குறித்து நான் தினமும் தகவல்களைப் பெறுகிறேன். அவசர தடத்தை மோட்டார் சைக்கிளோட்டிகள் தங்களுக்கான சிறப்பு தடமாக எண்ணி விடுகின்றனர். அவசரத் தடம் தங்களுக்கான சிறப்பு தடம் அல்ல என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும். அது பழுது ஏற்பட்டால் வாகனங்கள் பயன்படுத்தும் தடம் என உணர வேண்டும்,", என்று அவர் கூறினார்.

`Smart Lane` எனப்படும் விவேகப் பாதை இருப்பதால், மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் அது குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அவர், நெடுஞ்சாலையில் அவசரத் தடத்தைப் புரிந்து பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.