சிரம்பான், பிப். 18 - கடந்தாண்டு ஒரு சிறார் பராமரிப்பு மையத்தில் ஐந்து முதல் ஆறு வயது வரையிலான நான்கு சிறுமிகளை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக கொண்டு வரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை இளம் பெண் ஒருவர் ஒப்புக்கொண்டார்.
20 வயதான புத்ரி நூரின் அமலினா அகமது டாவுட் எற்றஹ்ஓ அப்பெண்
இரண்டு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிகளான டத்தின் சுரிதா புடின் மற்றும் மியோர் சுலைமான் அகமது தர்மிசி ஆகியோரின் முன்னிலையில் தனது தொடக்க வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டு தனக்கு எதிரான குற்றஞ்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.
அப்பெண்ணின் மனுவை சட்டத் துறைத் அலுவலகம் (ஏஜிசி) ஏற்க மறுத்ததை தொடர்ந்து இரு நீதிபதிகளும் அவரது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டனர்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது துணை அரசு வழக்கறிஞர்களான இந்தான் நூராஷிகின் நசாருடின் மற்றும் நூருல் பால்கிஸ் ஜுனைடி ஆகியோர் சட்டத் துறைத் தலைவர் அலைவலகத்தின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் போஸ்டமாம் அகமது ஆஜரானார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு சிறார் பராமரிப்பு மையத்தில் தனது பராமரிப்பில் இருந்த நான்கு இளம் சிறுமிகளின் கைகளில் சூடான உலோக கரண்டியை அழுத்தி தீக்காயங்களை ஏற்படுத்தியதாகப் புத்ரி மீது நான்கு குழந்தை சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவருக்கு எதிராக 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் (சட்டம் 611) 31(1)(a)வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தண்டனை விதிப்பதற்கும் சமூக நல அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் ஏதுவாக நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.


