கோலாலம்பூர், பிப் 18 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025/2026 பள்ளி அமர்வின் முதல் நாளான நேற்று கம்போங் பாரு தேசிய பள்ளிக்கு காலை 10 மணி அளவில் திடீர் வருகை புரிந்தார்.
அவர் அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடியதோடு முதலாம் ஆண்டு மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டார். பிரதமர் அப்பள்ளியில் சுமார் 40 நிமிடங்கள் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 2025/2026 கல்வி ஆண்டின் அமர்வு சுமார் 5 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கியுள்ளது. நேற்று 11 மாநிலங்களில் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய வேளையில் ஞாயிறு அன்று கெடா, திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் 632,260 மாணவர்கள் தங்களது புதிய கல்வி ஆண்டை தொடங்கினர்.


