செமினி, பிப் 18 – ரமலான் நோன்பு மாதத்தில் பள்ளி நேரங்களில் முந்தைய ஆண்டுகளைப் போலவே பள்ளி சிற்றுண்டிச்சாலைகள் வழக்கம் போலவே செயல்படும் என கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் கூறினார்.
ஏதேனும் சிறப்புத் தேவைகள் அல்லது குறிப்பிட்ட சிக்கல்கள் இருந்தால் நாங்கள் கவனத்தில் கொள்வோம். மற்றபடி நடப்பிலுள்ள ரமலான் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டார்.
சிற்றுண்டிச் சாலை நடத்துநர்களுக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டிகளே பொருந்தும் என்று அவர் கூறினார்.
பள்ளிகளுக்கான SOP நடைமுறையின் ஒரு பகுதியாக ரமலான் மாதத்தில் சிற்றுண்டிச் சாலைகள் தொடர்ந்து செயல்படும் என்று கடந்தாண்டு ஃபாட்லினா அறிவித்திருந்தார்.
நோன்பு எடுப்பவர்களுக்கு பரஸ்பர மரியாதை கொடுப்பது பற்றி முஸ்லீம் அல்லாத மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும் கல்வியையும் பள்ளிகள் வழங்க வேண்டும்.
ரமலான் சூழலில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மதிக்கும் பண்பு மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக் காட்டினார்


