கோலாலம்பூர் பிப் 17- மின்னல் எப்.எம்.மில் மீண்டும் கலப்படம் ஒளியேற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
மலேசிய வானொலி ஒளி ஒலிபரப்பு துறை இயக்குநரிடம் பேசி அதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் நேற்று நடைபெற்ற மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் மகரா சங்கராந்தி சேரட்டி கீதாஞ்சலி விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றியபோது அமைச்சர் இதனை அறிவித்தார்.
முன்பெல்லாம் மலேசிய வானொலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு கலப்படம் ஒளியேறும்.
கலப்படம் நிகழ்ச்சி வழி ஏராளமான இளம் கலைஞர்கள் உருவாக்கப்பட்டார்கள்.
ஆனால் இப்போது கலப்படம் நிகழ்வு ஒளியேற்றப் படவில்லை.
மின்னல் எப்.எம் . பண்பலையில் கலப்படம் ஒளியேறுவதற்கு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் முன் வர வேண்டும் என்று மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் தலைவர் டத்தோ காந்தராவ் தமது உரையில் வலியுறுத்தினார்.
டத்தோ காந்தராவ் முன் வைத்த கோரிக்கையை ஏற்று கொண்ட அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில், இதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
மேலும் மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் சமூகநல திட்டங்களுக்கு உதவும் வகையில் பத்தாயிரம் வெள்ளி மானியம் வழங்குவதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன், குமரன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் சிறப்பு அதிகாரி மண்டிப் சிங் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


