பேங்கோக், பிப் 17– மியன்மாரில் வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 15 மலேசியர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்குவதற்காக, பேங்கோக்கில் உள்ள மலேசியத் தூதரகம் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
மார்வான் முஸ்தாவா கமல் எனும் தூதரக அதிகாரி அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
அந்த 15 பேரையும் தாயகம் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டது.
மியன்மாரிலிருந்து தாய்லாந்திற்கு புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட 261 பேரில் இந்த 15 மலேசியர்களும் அடங்குவர். 21 முதல் 68 வயதுக்குட்பட்ட அவர்களில் மூவர் பெண்களாவர்.
தற்போது வட தாய்லாந்தில் இராணுவ முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.


