கோலாலம்பூர், பிப். 17 - உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற வீங்கிய பாதங்கள் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு மத்தியில் வாழ்க்கையை எதிர்கொண்டு வரும் மூதாட்டி ஒருவருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
ஜியாரா மடாணி தொடரின் ஒரு பகுதியாக பகாங் மாநிலத்தின் குவாந்தான், செமாம்புவில் வசிக்கும் 85 வயதான பின்னம்மாள் ஏ/பி குட்டன் என்ற அந்த மூதாட்டியின் இல்லத்திற்கு சென்ற பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமது ஃபர்ஹான் பவுஸி இந்த நன்கொடையை வழங்கினார்.
இந்தச் சந்திப்பின் நான் அவரது கதையைக் கேட்டறிந்தேன். அவர் எதிர்கொண்ட சிரமங்களைப் புரிந்துகொண்டேன். பரிவையும் பகிர்ந்து கொண்டேன். அவரின் சுமையைக் குறைக்கும் வகையில் பரிவின் அடையாளமாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அளித்த நன்கொடையை நான் சமர்ப்பிக்கிறேன்.
பின்னமாள் விரைவில் ஆரோக்கியத்தையும் வலிமையையும் பெறுவார் என்று நம்புகிறேன் என்று அகமது பர்ஹான் நேற்றிரவு முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார். இந்தப் பதிவை பிரதமர் அன்வாரும் பகிர்ந்து கொண்டார்.


