மஞ்சோங், பிப் 14: பேராக் மாநிலத்தில் பயிலும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த வசதி குறைந்த 500 மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிச் சீருடை, காலணி மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதிய பள்ளி தவணையை முன்னிட்டு வசதி குறைந்த மாணவர்களின் பெற்றோர்களின் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மஞ்சோங் மற்றும் பேராக் தெங்கா மாவட்டங்களைச் சேர்ந்த 54 மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் சண்முகம் கூறினார்.
மூன்றாவது ஆண்டாக தொடரும் இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் என்று சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புறப்பாடப் பிரிவு துணைத் தலைமை ஆசிரியருமான அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


