கோத்தா பாரு, பிப் 13 - தாய்லாந்திற்கு கடத்த முயன்றதாக நம்பப்படும் 31 லட்சம் ரிங்கிட் மத்திப்பிலான தேங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாய்லாந்தில் அதிக விலைக்கு அதாவது ஒரு தேங்காய் நான்கு ரிங்கிட்டிற்கு விற்கப்படுகின்ற நிலையில், கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தாய்லாந்துக்கு கடத்துவதற்காக, கிளந்தான் கொண்டுச் செல்வதற்கு முன்னதாக, தேங்காய்கள் இந்தோனேசியாவில் இருந்து பத்து பஹாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.


