நிபோங் திபால், பிப் 13 - அதிகமான மாணவர்களைக் கொண்டிருக்கும் பள்ளிகளில் ஏற்படும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய குறிப்பாக நகர்புறங்களில் புதிய பள்ளிகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
2025-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் வழி மடாணி அரங்சாங்கம் 44 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக நகர்ப்புறங்களில், அதிகமான மாணவர்களை கொண்டிருக்கும் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு புதிய பள்ளிகளின் கட்டுமானத்தை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.
நகரில் உள்ள சில பள்ளிகளில் முதல் வகுப்பை சேர்ந்த 50 மாணவர்கள் ஒரே வகுப்பில் சேர்க்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பெற்றோர்கள் எழுப்பியுள்ள புகார்கள் குறித்து ஃபட்லினா கருத்துரைத்தார்.
எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலைமைகள் மற்றும் சூழல் குறித்து கல்வி அமைச்சு முழு கவனம் செலுத்தி வருவதாகவும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்ப்பது உட்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.


