ஜாசின், பிப் 13: இன்று கம்போங் பெரங்கன் எனாம், உம்பாய்வில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை 1.40 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. உடனே, மெர்லிமாவ் மற்றும் பாடாங் தேமு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“சம்பவ இடத்திற்கு வந்தபோது, 20×60 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு ஏற்கனவே 80 சதவீதம் எரிந்துவிட்டது.
“ஆரம்பக்கட்ட விசாரணையில் ஐந்து உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன (ஓர் ஆண் மற்றும் நான்கு குழந்தைகள்). அதே நேரத்தில் இன்னொரு ஆண் உயிர் தப்பினார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இன்னும் விசாரணையில் உள்ளது.
– பெர்னாமா


