கோலாலம்பூர், பிப். 12 - இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சபா மற்றும் சரவாக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 11 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 1,086 பேராகப் பதிவாகியுள்ளது.
சரவாக் மாநிலத்தில் நேற்றிரவு 604 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 609 ஆக சற்று உயர்வு கண்டுள்ளது.
மாநிலத்தில் ஏழு துயர் துடைப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் கூறியது.
முக்காவில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் நேற்று 303 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 308 பேராக உயர்வு கண்டுள்ளது.
மிரியில் உள்ள இரு மையங்களில் 210 பேரும் பிந்துலுவிலுள்ள ஒரு மையத்தில் 88 பேரும் சிபுவிலுள்ள ஒரு மையத்தில் மூவரும் தங்கியுள்ளனர்.
சபாவில் , நேற்றிரவு 159 குடும்பங்களைச் தேர்ந்த 505 பேர் தங்கியிருந்த நிலையில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி அந்த எண்ணிக்கை 145 குடும்பங்களைச் சேர்ந்த 477 பேராக குறைந்துள்ளது.


