கோலாலம்பூர், பிப். 12- சிலாங்கூர், டாத்தாரான் பெர்னியாகான் செராஸ், ஜாலான் டாத்தாரான் செராஸ் 6 இல் அமைந்துள்ள பட்டாசு விற்பனைக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு நேற்றிரவு 9.53 மணிக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் ஒரு அறிக்கையில் கூறினார்.
பண்டார் துன் ஹூசைன் ஒன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 13 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு மூன்று இயந்திரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த தீவிபத்தில் டோயோட்டா வெல்ஃபயர், பெரோடுவா பெஸ்ஸா, புரோட்டான் சாகா கார்களும் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பாதிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.


