கோலாலம்பூர் பிப் 11. நிதி அமைச்சுக்கு சொந்தமான மற்றும் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்றம் அமைச்சகத்தின் (பெட்ரா) கீழ் இயங்கும் ஐ. டபிள்யூ. கே. என்னும் இண்டா ஓட்டர் , தேசிய கழிவு நீர் மேம்பாட்டு வாரியமும் தைப்பூச ரத ஊர்வலத்திற்கு தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்திருந்தது.
ஆண்டுதோறும் அனைத்து இந்து பக்தர்களுக்கும் இப்படிப்பட்ட பந்தலை ஏற்பாடு செய்து வரும் இந்நிறுவனம். இந்த ஆண்டும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்திருந்தாலும், பானங்களுடன் உணவும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் மாலை வரை வழங்கப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்திருந்தனர்.
இதில் பக்தர்களும் வழிப்போக்கர்களும் கூட ஆர்வமுடன் பங்கு கொண்டதாக கூறினர். இந்த நிகழ்வுக்கு இண்டா ஓட்டர் நிறுவனமும் அதன் ஊழியர்களும் நிதியுதவி செய்து வருவதாக அறியப்படுகிறது.


