MEDIA STATEMENT

சனிக்கிழமைக்குள் அனைத்து கைதிகளையும் விடுவிக்காவிடில்  போர் நிறுத்தம் ரத்து- டிரம்ப் பரிந்துரை

11 பிப்ரவரி 2025, 4:16 AM
சனிக்கிழமைக்குள் அனைத்து கைதிகளையும் விடுவிக்காவிடில்  போர் நிறுத்தம் ரத்து- டிரம்ப் பரிந்துரை

வாஷிங்டன், பிப். 11 - வரும் சனிக்கிழமைக்குள் காஸா பகுதியில் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும்  இடையிலான  போர்நிறுத்தத்தை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ளதாக அனாடோலு ஏஜென்சி  செய்தி வெளியிட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, வரும் சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்குள் அனைத்து பிணைக்கைதிகளையும் திருப்பி அனுப்பவில்லை என்றால் - இது ஒரு சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன் - நான் சொல்வேன், அதை ரத்துசெய்து அனைத்து பேரங்களும் முடிந்து களேபரம் தொடங்கட்டும். சனிக்கிழமை மதியம் 12.00மணிக்குள் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் கூறுவேன் என அவர் சொன்னார்.

அவர்கள் அனைவரும்  திருப்பித் அனுப்பப்பட வேண்டும் -  முழுமையாக. கொஞ்சம் பேராக அல்ல, இரண்டு. ஒன்று, மூன்று, நான்கு பேராக அல்ல - சனிக்கிழமை மதியம் 12.00 மணிக்குள். அதன் பிறகு, நான் கூறுவேன். பிரளயம் ஏற்படும்  என்று அவர் திங்களன்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு  பிறகு, இது ஒரு வித்தியாசமான பந்து விளையாட்டாக இருக்கும். எனக் கூறிய டிரம்ப்பிடம் இஸ்ரேலின் பதில் தாக்குதலைக் குறிப்பிடுகிறீர்களா நிருபர்கள் என்று கேட்டதற்கு, நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், அவர்களும் கண்டுபிடிப்பார்கள். நான் என்ன சொல்கிறேன் என்பதை ஹமாஸும் கண்டுபிடிக்கும் என்று அவர் பதிலளித்தார்.

சனிக்கிழமை காலக்கெடுவுக்குப் பிறகு அமெரிக்காவின் ஈடுபாட்டை உங்களால் நிராகரிக்க முடியுமா என்று கேட்டபோது, ​​என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று டிரம்ப் கூறினார்.

காஸாவில் இருந்து பாலஸ்தீனர்கள் இடம்பெயர்வதை ஜோர்டான் மற்றும் எகிப்து ஏற்கவில்லை என்றால் அவற்றுக்கான உதவிகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆமாம், இருக்கலாம். சரி, ஏன் கூடாது? அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நான் உதவியை நிறுத்தி வைப்பேன், ஆம்," என்று டிரம்ப் கூறினார்.

மேலும் பாலஸ்தீனர்களை ஏற்றுக்கொள்ள ஜோர்டான் மன்னரை   எப்படி சம்மதிக்க வைப்பீர்கள் என்று கேட்டதற்கு அவர் ஏற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கிறேன். மற்ற நாடுகளும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு நல்ல இதயம் உள்ளது என்றார் அவர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.