பங்சார், பிப் 10: பொது உயர்க்கல்வி கழகங்களில் இணைய வசதியை மேம்படுத்தும் முயற்சியின் முதலாவது கட்டத்தில் மூன்று அரசாங்க உயர்க்கல்வி கழகங்களில் 3,149 இடங்களில் அகண்ட அலைவரிசை சேவை பொருத்தப்படும்.
அவற்றில், மலாயாப் பல்கலைக்கழகத்தின் நான்கு புலங்கள் மற்றும் ஒரு மாணவர் தங்கும் விடுதி என 1,837 இடங்களில் இச்சேவை பொருத்தப்படும்.
எஞ்சியவை, மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் பெர்லிஸ் மலேசிய பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பொருத்தப்படும் என தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
ஒரு கோடியே 16 லட்சம் ரிங்கிட் செலவை உட்படுத்திய இச்சேவையைப் பொருத்தும் பணிகள் நிறைவடைய, மூன்று வாரத்திற்கு மேல் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மலாயா பல்கலைக்கழகத்தில், இணைய சேவை பொருத்தும் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.


