கூச்சிங், பிப் 10: 2024ஆம் ஆண்டில் நடமாடும் ஓரிட சமூக ஆதரவு மையத் (பி.எஸ்.எஸ்.எஸ்) திட்டத்தின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வாண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் முயற்சியை தேசிய சமூகநல அறவாரியம் விரிவுப்படுத்தவிருப்பதாக மகளீர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷூக்ரி கூறினார்.
எங்களுடைய ஆலோசகர்களும் சிறந்த நிபுணத்துவ தொழிலாளர்கள் தான். இச்சேவையை மருத்துவமனையில் திறந்த போது ஒரு மணி நேரத்திற்குள் 96 அதிகாரிகள் வருகை புரிந்தனர் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


