கோத்தா கினபாலு, பிப். 10 - இன்று காலை 10.39 மணியளவில் சபாவின் கோத்தா மருடுவில் ரிக்டர் அளவில் 3.8 எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் 6.3 டிகிர வடக்கிலும் 116.8 டிகிரி கிழக்கிலும் கோத்தா மருடுவிலிருந்து தெற்கே 27 கிலோமீட்டர் தொலைவிலும் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.
பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கோத்தா மருடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோத்தா மருது பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமையை வானிலை ஆய்வுத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதற்கிடையில், இந்த பூகம்பம் காரணமாக ஏற்பட்ட சேதம் அல்லது அவசர உதவி தொடர்பில் இதுவரை அழைப்பும் வரவில்லை என்று சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.
இம்மாவட்டத்தில் உள்ள ஆபத்தான வளாகங்களில் தீயணைப்புத் துறை தற்போது ஆய்வுகளையும் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகிறது.


