பெண்டாங், பிப். 10- இங்கு அருகிலுள்ள செகார், பாடாங் தெராப் ஆற்றில் மோட்டார் சைக்கிள் விழுந்ததில் அதனை ஓட்டிச் சென்ற பதின்ம வயது இளைஞர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு இரவு 7.16 மணிக்கு அழைப்பு வந்ததாகவும் பெண்டாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்புத் உதவித் தலைவர் முகமது எஸ்சாட் எம்ரான் எசானி கூறினார்.
சம்பவ இடத்திற்கு அடைந்த போதுஒரு மோடேனாஸ் கிறிஸ் ரக மோட்டார் சைக்கிள் ஆற்றில் கிடந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். சுமார் 17 வயதுடைய இளைஞர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாகக் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுவதாக அவர் சொன்னார்.
மேற்பரப்பு தேடல் முறையைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று அவர் இன்றிரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இப்போது வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக முகமது எஸ்சாட் எம்ரான் கூறினார்.


