ஷா ஆலம், பிப் 9- இங்குள்ள செத்தியா ஆலமில் அமைந்திருக்கும் பேரங்காடி ஒன்றில் நேற்று துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை உறுதிப்படுத்திய ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகக் கூறினார்.
அங்கு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது உண்மைதான். போலீஸ் குழு இப்போதுதான் அங்கு சென்றது. இதன் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் சொன்னார்.
முன்னதாக, செத்தியா ஆலமில் உள்ள பேரங்காடி ஒன்றில் செயல்பட்டு வரும் நகைக்கடையில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததைச் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.


