NATIONAL

பெல்ஜியம் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்ளில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை

8 பிப்ரவரி 2025, 7:33 AM
பெல்ஜியம் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்ளில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா, பிப் 8: பெல்ஜியம் தலைநகர் `Brussels`இல் நிகழ்ந்த தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது.

மேலும், அங்குள்ள மலேசியா தூதரகம் நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், பெல்ஜியத்தில் வசிக்கும் அல்லது அந்நாட்டுக்கு தற்சமயம் சுற்றுலா மேற்கொண்டுள்ள மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்றி விழிப்புடன் இருக்குமாறும் விஸ்மா புத்ரா கேட்டு கொண்டது.

இன்னும் மலேசியத் தூதகரத்திடம் பதிந்துக்கொள்ளாத பெல்ஜியமில் இருக்கு மலேசியர்கள் விரைந்து அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 72 மணி நேரங்களில் பெல்ஜியமில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்ளில் ஒருவர் கொல்லப்பட்டு, மூவர் காயமடைந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.