கோலாலம்பூர், பிப் 7: இன்று பிற்பகல் தொடங்கி நாளை வரை சபா மற்றும் சரவாக்கில் உள்ள பல பகுதிகளில் அபாய நிலையில் தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிபு (சிலாங்காவ்), முக்கா (டாரோ, மாத்து, டலாட்,முக்கா), பிந்துலு மற்றும் மிரி (சுபிஸ், மிரி) ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று அறிக்கையின் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
மேற்குக் கடற்கரை (ரனாவ் மற்றும் கோத்தா பெலுட்), சண்டாகான் (தெலுபிட், கினாபாதாங்கன், பெலூரன் மற்றும் சண்டாகான்) மற்றும் குடாட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சபாவிலும் இதே நிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
– பெர்னாமா


