புத்ராஜெயா, பிப். 7- நிதி ஆலோசக நிறுவனம் சம்பந்தப்பட்ட ஓப் ஸ்கை ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள் தொடர்பான விசாரணை ஆவணங்களை தயாரிப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பில் நேற்று எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் ஒரு பிரபல பாடகர் உட்பட மூன்று பிரபலங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை அறிக்கையை தயாரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த மூன்று பிரபலங்களும் ஊடகங்கள் செய்தி செய்தி வெளியிட்டது போல் பின்வாசல் வழியாக அல்லாமல் பிரதான வாசல் வழியாக வாக்குமூலம் அளிக்க வந்ததாக வட்டாரங்கள் குறிப்பிட்டன.
அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறும் பணி பெறுவதை முடித்துவிட்டது. இப்போது விசாரணையை முடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
நேற்று காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்த அவர்கள் பிற்பகல் 2.30 மணியளவில் வாக்குமூலம் வழங்கி வழங்கி முடித்தனர். இப்போதைக்கு புதிய கைது நடவடிக்கை எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த விசாரணையை முடிக்க அந்த மூன்று பிரபலங்களும் வாக்குமூலம் வழங்கியதை எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
நிறுவனம் ஒன்றின் விளம்பரத் தூதர்களாக ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை பணியாற்றியதற்காக சம்பந்தப்பட்ட பிரபலங்கள் மற்றும் கலைஞர்கள் 400,000 வெள்ளி வரை பணம் பெற்றது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அசாம் முன்னதாகக கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


