கோலாலம்பூர், பிப் 7 – இன்று மதியம் 3 மணிக்கு பத்துமலை திருதளத்திற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை புரியவிருக்கிறார்.
இந்துக்களின் முக்கிய திருத்தலமாக மட்டுமின்றி உலக வரைப்படத்தில் மலேசியாவின் முக்கிய சுற்றுலா மையமாகவும் திகழும் பத்துமலையில் எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் பிரதமரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பத்துமலையில் தற்போது மேற்கொள்ளப்படும் தைப்பூசக் கொண்ட்டாட்டத்திற்கான முன் ஏற்பாடுகளை பார்வையிடுவதோடு அங்குள்ள இந்தியர்களுடன் பிரதமர் நேரத்தை செலவிடுவார் என தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் தெரிவித்தார்.


