பெட்டாலிங் ஜெயா, பிப் 6 — இவ்வாண்டு ரம்ஜான் சந்தை வியாபாரம் செய்யும் வணிகர்களை பாதுகாக்க பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.பி.ஜே.) சமூகப் பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒத்துழைப்பை (சொக்சோ) ஏற்படுத்தியுள்ளது.
முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, நோன்பு மாதத்தில் வணிகத்தில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய விரும்பத்தகாத சம்பவங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணை டத்தோ பண்டார் அஸ்னான் ஹாசன் கூறினார்.
இந்தத் திட்டத்தில் அனைத்து வர்த்தகர்களும் பதிவு செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது அவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதோடு மாதத்திற்கு 13.90 வெள்ளி மட்டுமே செலவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
வர்த்தகர்கள் பதிவு செய்ய (சொக்ஸோவிற்கு பங்களிக்க) ஒரு முகப்பிடத்தை நாங்கள் திறந்துள்ளோம் என்று நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் "மகிழ்ச்சியான மற்றும் நிலையான" ரம்ஜான் சந்தை 2025 எனும் நகழ்வைது தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இதனிடையே, மாவட்டத்தில் உள்ள ரம்ஜான் சந்தைகளில் சுமார் 100 எம்.பி.பி.ஜே. மற்றும் மக்கள் தன்னார்வப் படை உறுப்பினர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று அஸ்னான் கூறினார்.
அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது போன்றப் பணிகளில் ஈடுபடுவார்கள். எம்.பி.பி.ஜே. ஊழியர்கள் தூய்மையையும் கண்காணிப்பார்கள் என்றார் அவர்.
ரம்ஜான் மாதத்தில் அனுமதி இல்லாமல் வர்த்தகம் புரியும் வணிகர்கள் மீது மாநகர் மன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.


