NATIONAL

நாட்டின் சுகாதாரத் துறையில் ஏ.ஐயின் பங்களிப்பு

6 பிப்ரவரி 2025, 5:31 AM
நாட்டின் சுகாதாரத் துறையில் ஏ.ஐயின் பங்களிப்பு

கோலாலம்பூர், பிப் 6: நாட்டின் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது.

நோய்களைக் கண்டறிவதிலும், விரைந்து அதனைக் குணப்படுத்துவதிலும் ஏ.ஐ முக்கிய பங்காற்ற முடியும் என்று சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி கூறினார்.

மார்பக எக்ஸ்-ரே பரிசோதனைகளுக்கான செலவைக் குறைத்து, அதற்கு மாற்றாக, ஏ.ஐ பயன்படுத்த அதன் ஆய்வுகளில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

''2025 மெகாட் ரம்லி ஆய்வின் அடிப்படையில், மார்பு எக்ஸ்ரேவில் AI 56.4 முதல் 95.7 விழுக்காடு வரை அதிக உணர்திறனைக் காட்டுகிறது. கதிரியக்க வல்லுநர்களோடு ஒப்பிடுகையில் நுரையீரலின் பகுதிகளை தனித்தன்மையுடன் கண்டறிவதில் அது 23.2 முதல் 76 விழுக்காட்டைக் காட்டுகிறது,'' என்று அவர் கூறினார்.

புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட நோய்களைக் கண்டறிய, கதிரியக்க வல்லுநர்களுக்கு உதவுவதில் AI-இன் பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் ஆரம்பக்கட்ட முடிவுகள் தொடர்பில், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமாட் ஹஸ்நிசான் ஹருன் எழுப்பிய கேள்விக்கு லுகானிஸ்மான் அவ்வாறு பதிலளித்தார்.

விரைந்து குணப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறிதல், கதிரியக்க வல்லுநர்கள் இல்லாதது உட்படப் பல அம்சங்களின் மூலம் ஏ.ஐ-இன் பயன்பாடு நோயாளிகளுக்கும் அமைச்சுக்கும் நீண்டகால சிகிச்சையின் செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.