ஷா ஆலம், பிப் 5: எதிர்வரும் பிப்ரவரி 10ஆம் திகதி தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவையை கோத்தா கெமுனிங் சட்டமன்ற மக்கள் சேவை மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
இச்சேவை இரவு 8 மணிக்கு தாமான் ஶ்ரீ மூடா மற்றும் ஆலம் மேகா கோவில்களிருந்து பஸ்கள் பத்து கேவ்ஸ் கோவிலுக்கு செல்ல வழங்கப்படும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தெரிவித்தார்.


